கடையில் திருட்டு
Views - 51 Likes - 0 Liked
-
ராஜாக்கமங்கலம் அருகே கடையின் முன்பக்க கதவை உடைத்து மேஜையிலிருந்த 5 ஆயிரம் ரூபாயை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது பற்றி போலீசார் தெரிவித்ததானது.
ஈத்தாமொழி அருகே ஆடறவிளையைச் சேர்ந்தவர் ரத்தனசாமி(65). இவர் ராஜாக்கமங்கலத்தில் பழக்கடை நடத்திவருகிறார். சம்பவத்தன்று காலை இவர் கடையை திறக்கச் சென்ற போது கடையின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது மேஜையிலிருந்த 5 ஆயிரம் ரூபாயை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளது தெரியவந்தது. பின்னர் இதுபற்றி ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News