மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்க திரண்டது காங்.,
Views - 282 Likes - 0 Liked
-
குமரி மாவட்டத்தில் பிரச்னையை உருவாக்கும் வகையில் போஸ்டர் ஒட்டிய பா.ஜ., கட்சியினர் மீது நடவடிக்கை கேட்டு மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷன் முன் ஏராளமான காங்., கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உ.பி. இளம்பெண் பலாத்கார சம்பவம் தொடர்பாக குமரி மாவட்டத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் காங்., கட்சியை இழிவுபடுத்தும் வகையிலும் பா.ஜ., கட்சியை சேர்ந்த சிலர் போஸ்டர்களை ஒட்டி உள்ளதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு காங்., கட்சி நிர்வாகிகள் திவாகர், ரவிசங்கர், மோகனதாஸ், ரமேஷ்குமார், ஜோசப்தயாசிங் உட்பட ஏராளமானோர் மார்த்தாண்டம் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டனர். தொடர்ந்து போலீசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர். இந்நிலையில், மார்த்தாண்டம் பகுதியில் போஸ்டர் ஒட்டியதாக மார்த்தாண்டம் அருகே விரிகோடு பகுதியை சேர்ந்த உமேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News