கன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் இயக்கம்
Views - 27 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி மாவட்டத்தில் 760 அரசு பஸ்களில் 498 பஸ்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் பயணிகள் ஆரம்ப கட்டத்தில் பயணம் செய்ததை விட தற்போது கூடுதலாக அரசு பஸ்களில் பயணம் செய்து வருகின்றனர்.
பயணிகளின் தேவைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையையும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிகரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்பு 760 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பஸ்கள் இயக்கம் துவங்கிய போது சுமார் 258 பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது 498 அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் நாகர்கோவில் வடசேரியில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட என்ட் டூ என்ட் 20 பஸ்களும் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கழக அதிகாரி தெரிவித்தார்.
News