பேச்சிப்பாறை அணையில் நீர் மட்டம் உயர்வு; வெள்ள அபாய எச்சரிக்கை
Views - 258 Likes - 0 Liked
-
குழித்துறை ஆறு கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க தெரிவிக்கப்பட்டு உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த மழையில் அணைகளின் நீர்மட்டம் முழு கொள்ளளவை நெருக்கும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை வெள்ள அபாய அளவான 42 அடியை 15 ம் தேதியே எட்டி உள்ளது.
அணை நீர்மட்டம் அதிக மழையினால் 46 அடிக்கு மேல் வரும் பட்சத்தில் அதற்கு மேல் வரும் உபரிநீர் பேச்சிப்பாறை அணையில் இருந்து கோதையாற்றில் திறந்து விட்டு களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டணத்தில் கடலில் சென்று சேரும். எனவே கோதையாறு தாமிரபரணி ஆறு ( குழித்துறை ஆறு) ஆகியவற்றின் கரையோரமாக வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
News