கலெக்டர் அலுவலக தார் சாலை மோசம் 2 எம்எல்ஏ க்கள் குற்றச்சாட்டு
Views - 273 Likes - 0 Liked
-
நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழக முதல்வர் வருகைக்காக போடப்பட்ட தார் சாலை படுமோசமாக போடப்பட்டதாக எம்எல்ஏ க்கள் குற்றம் சாட்டினர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தருவதாக இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. முதல்வரின் நிகழ்ச்சிக்காக நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தார் ரோடுகள் போடப்பட்டது. இந்த தார் ரோடுகள் தற்போது மோசமான நிலையில் உள்ளது. இதை நாகர்கோவில் எம்எல்ஏ சுரேஷ் ராஜன், கிள்ளியூர் எம்எல்ஏ ராஜேஷ் குமார் ஆகியோர் கலெக்டர் அலுவலகத்தில் மோசமான நிலையில் ஜல்லிகளாக உள்ளதை சுட்டி காட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலேயே இந்த நிலை என்றால் மாவட்டத்தின் பிற பகுதிகளில் சாலை பணிகள் எப்படி . மக்களின் வரிப்பணம் வீணாகிறது என்று புகார் தெரிவித்தனர்.
News