திருவட்டார் அருகே தாறுமாறாக ஓடிய லாரி மின்கம்பம், நிழற்குடை சேதம்
Views - 260 Likes - 0 Liked
-
மலைபகுதியான காளிகேசம் பகுதியிலிருந்து ரப்பர் தடிகளை ஏற்றிகொண்டு லாரி ஒன்று குலசேகரம், திருவட்டார் வழியாக கேரளாவுக்கு வந்து கொண்டிருந்தது. திருவட்டார் பகுதியில் வந்ததும் பாலம் அருகில் வைத்து ரோந்து போலீசார் லாரியை நிறுத்தும்படி கையசைத்தனர் .நிற்காத போன லாரியால் போலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு பின் தொடர்ந்து விரட்டியதாக தெரிகிறது. போலீசார் விரட்டியதை தொடர்ந்து டிரைவர் லாரியை வேகமாக ஓட்டினார்.லாரி கட்டுப்பாட்டை இழந்து அளவுக்கதிகமான பாரத்துடன் அங்குமிங்கும் வேகமாக சென்றது.
போலீசாரும் பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை கண்ட லாரி டிரைவர் லாரியை ஆற்றூரிலிருந்து அழகியமண்டம் நோக்கி வேகமாக ஓட்டினார். ஆற்றூர், அழகியமண்டபம் சாலையில் அங்குமிங்குமாக தாறுமாறாக ஓடிய லாரி வியன்னூர் துணை மின் நிலையம் அருகிலிருந்த நிழற்குடையில் மோதி கட்டிடம் சேதமடைந்து நொறுங்கியது். மின்கம்பம் இரண்டு சேதமடைந்தது. உடனடியாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் போக்குவரத்து இல்லாதிருந்ததாலும் பெரும் விபத்து தடுக்கப்பட்து.
இவ்வளவும் நடந்த பின்னரும் போலீசார் வருவதற்குள் டிரைவர் லாரியை அங்கிருந்து மீண்டும் ஓட்டி சென்றார். விபரீதத்தை உணர்ந்த போலீசார் இரவு ரோந்தில் இருந்த பிற பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஒருவழியாக வேர்கிளம்பி சந்திப்பில் சாலையின் குறுக்கே வாகனத்தை நிறுத்தி காத்திருந்த போலீசார் லாரியை மடக்கினர். இனிமேல் தப்பிச்செல்ல முடியாது என தெரிந்து கொண்ட டிரைவர் தப்பி ஓட முயன்றார். அப்போது அவரை மடக்கி பிடித்து லாரி மற்றும் டிரைவரை திருவட்டார் காவல்நிலையம் கொண்டு சென்றனர். விசாரணையில் அவர் குலசேகரத்தையடுத்துள்ள அயகோடு பகுதியை சேர்ந்த ஜெபராஜ் (36) போதையில் இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
News