வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி பறிமுதல்
Views - 271 Likes - 0 Liked
-
நாகர்கோவிலில் உள்ள ஒரு வீட்டில் அரசு முத்திரை பதிக்கப்பட்ட சாக்கு மூட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 டன் ரேசன் அரிசி பறிமுதல் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:
குமரி மாவட்டத்திலிருந்து ரேஷன் அரிசி கேரள மாநிலத்திற்கு கடத்தப்பட்டு வருவதும் காவல்துறை மடக்கிப் பிடித்து தடுத்து வருகிறது . நாகர்கோவில் ரயில்வே சாலையில் உள்ள பி ஜி எஸ் கார்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கோட்டாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில் அப்பகுதிக்கு சென்ற போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். ஐயப்பன் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். ரேஷன் அரிசி இருந்த சாக்கு மூட்டைகளில் அரசு சீல் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதன்மூலம் ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட அரிசி மூட்டைகள் அப்படியே மொத்தமாக இங்கு கொண்டு வரப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐயப்பன் உட்பட 2 பேரை கைது செய்து கோட்டார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News