தக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் முகாம்
Views - 41 Likes - 0 Liked
-
தக்கலையில் ஆதார் கார்டுகள் புதுப்பித்தல் மற்றும் புதிய கார்டுகள் பதிவு செய்தல் உள்ளிட்ட சிறப்பு முகாம் நான்கு நாட்கள் நடந்தது.
இந்திய தபால் துறை வார விழாவினை முன்னிட்டு தக்கலை தொழில் வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தக்கலை தலைமை தபால் துறையும் பத்மநாபபுரம் நகர தொழிற்சங்கமும் இணைந்து ஆதார் கார்டுகளில் உள்ள தவறுகளை திருத்தவும் மற்றும் புதிய ஆதார் கார்டு எடுக்கும் சிறப்பு முகாம் நான்கு நாட்கள் தக்கலையில் சங்க அலுவலகத்தில் நடந்தது. முகாமுக்கு சங்க தலைவர் ரேவன்கில் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் விஜய கோபால், செயலாளர்கள் ஜெகபர் சாதிக், மோசஸ் ஆனந்த், துணைத்தலைவர் சண்முகம், பொருளாளர் சங்கரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர் பத்மா தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு முகாமை முத்துக்குமரேஷ் துவக்கி வைத்தார். பத்மநாபபுரம் நகராட்சி மற்றும் கிராம பேரூர் பகுதிகளிலிருந்து 133 பேர் பங்கேற்றனர். இதில் 115 பேர் தங்களது பழைய ஆதார் கார்டுகளை திருத்தி கொண்டனர். 18 பேர் புதிய ஆதார் கார்ட் பதிவு செய்தனர். தபால் நிலைய அலுவலர் ஐசக் திருத்தம் மற்றும் புதிய கார்டுகள் எடுப்பதற்கான பணியில் ஈடுபட்டார். ஸ்ரீகுமார், கணபதி, தங்கசாமி மற்றும் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
News