குழித்துறையில் விழிப்புணர்வு பேரணி
Views - 39 Likes - 0 Liked
-
கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது.
மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் சார்பில் நடந்த வாகன பேரணிக்கு மாவட்ட அதிகாரி சரவணபாபு தலைமை வகித்தார். பேரணியை தக்கலை சப்கலெக்டர் சரண்யா அரி தொடங்கி வைத்தார். குழித்துறையில் தொடங்கிய பேரணி கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினர் கலந்து கொண்டனர்.
News