தக்கலையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி
Views - 53 Likes - 0 Liked
-
தக்கலையில் காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு வாகன பேரணி நடந்தது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடங்கி நேற்றுடன் 213 நாட்கள் ஆகிறது.மத்திய மாநில அரசுகளின் உத்தரவுப்படி காவல்துறையினர் தன்னலம் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் பல போலீஸ் அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள் சிக்கி பலியான நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் காவல்துறையினர் பாதிக்கப்பட்டனர். தன்னலம் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை பல வழிகளில் ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் எஸ்பி பத்ரி நாராயணன் ஆலோசனைப்படி தக்கலை உட்கோட்ட காவல்துறை டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. இந்த பேரணி மணலி ஜங்ஷனிலிருந்து துவங்கி தக்கலை பழைய பஸ் நிலையம் வரை நடந்தது. இதில் சட்ட ஒழுங்கு காவல் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் கலந்து கொண்டனர்.
இன்ஸ்பெக்டர்கள் அருள் பிரகாஷ் மற்றும் டேனியல், கிருபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரண்டு காவல் துறையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் வழி நடத்தினர். மேட்டுக்கடை காமராஜ் பேருந்து நிலையம் முன் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் கொரோனா விழிப்புணர்வு பொதுமக்களுக்கு கொடுக்கப்பட்டு இலவசமாக முக கவசங்களை டிஎஸ்பி வழங்கினார். மேலும் முக கவசம் அணிதல் சமூக இடைவெளியுடன் வாழ்வது குறித்து எடுத்துரைக்கப்பட்டது
News