ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு கூடுதல் போனஸ் வழங்க கோரிக்கை
Views - 274 Likes - 0 Liked
-
அரசு ரப்பர் தோட்டங்களில் பணிபுரியும் அனைத்து தரப்பு தொழிலாளர்களுக்கும் முப்பது சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என ஐ என் டி யூ சி மாவட்ட தொழிலாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, கோதையார், சுருளகோடு, பாலமோர், ஆலஞ்சோலை, சிற்றார், குற்றியார், மைலார் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான ரப்பர் தோட்டங்கள் உள்ளன இங்கு பல ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் தற்போது அவர்களுக்கு இந்த ஆண்டின் பணிவிகிதம் குறைந்த அளவில் காணப்பட்டது. இதனால் போதிய வருவாய் இல்லை .
குமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்டத்தில் பணிபுரியும் பால்வெட்டு, பால்வடிப்பு, காட்டுவேலை, பாக்டரி வேலை, காவலர்வேலை உள்ளிட்ட பணியாளர்கள் இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கும் போதிய வருவாய் இல்லாமல் காணப்படுகிறது. இதனால் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் போனஸ் தொகையை உயர்த்தி இந்த ஆண்டு அனைத்து தொழிலாளர்களுக்கும் முப்பது சதவிகிதம் போனஸ் வழங்க வேண்டும் என அனந்தகிருஷ்ணன் அரசு மற்றும் நிர்வாகத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
News