பனை ஏறும் தொழிலாளிக்கு உதவிட மனு
Views - 245 Likes - 0 Liked
-
பனை ஏறும் தொழிலாளி குடும்பத்துக்கு உதவி கேட்டு கலெக்டரிடம் காமராஜர் ஆதித்தனார் கழகம் சார்பில் மனு கொடுத்தனர்.
தெற்கு தாமரைக்குளம் பகுதியை சேர்ந்தவர் சங்கர், பனை ஏறும் வேலை செய்து வந்தார். கடந்த மே மாதம் பனை ஏறும் போது தவறி விழுந்து கை, கால்கள், மற்ற பகுதிகள் பாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார். அவருக்கு 10 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவரது தந்தை 72 வயதுடைய ஊனமுற்றவர்.
அவருக்கு ஊனமுற்றவர் உதவி தொகையும் கிடைக்கவில்லை. எனவே பனை ஏறும் தொழிலாளியின் குடும்ப வாழ்வாதாரத்திற்கு அரசு உதவி தொகையோ, அவருடைய மனைவிக்கு ஒரு அரசு வேலையோ கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
News