விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு நோட்டிஸ் வினியோகம்
Views - 328 Likes - 0 Liked
-
தக்கலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தீயணைப்பு துறை சார்பில் நடந்தது.
தீபாவளி பண்டிகை விபத்து இல்லாமல் நடக்க வேண்டும் என்பதை மக்களுக்கு அறிவுறுத்தும் விதமாக மக்களிடம் நோட்டீஸ் கொடுத்து அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள வழிமுறைகளை தீயணைப்பு துறையினர் எடுத்துக்கூறினர். இதில் மக்கள் கடைபிடிக்கும் விதமாக நோட்டீஸில் பெரியவர்கள் மேற்பார்வையில் பட்டாசு வெடிக்க ப்படவேண்டும். குடிசை இல்லாத பகுதிகளில் பட்டாசு வெடிக்கவும், மத்தாப்பு கொளுத்தும் போது இறுக்கமான ஆடைகளை அணிய வேண்டும்
எனவும், பட்டாசு கொளுத்தும் போது பக்கத்தில் தண்ணீர் இருக்கவும், நீண்ட வத்திகளைக் கொண்டு பட்டாசு வெடிக்க செய்யவும், தீ விபத்து ஏற்பட்டால் ஓடாமல் தண்ணீர் ஊற்றி அணைக்கவோ அல்லது தரையில் படுத்து உருள வேண்டும் என்பன போன்ற ஒன்பது நிபந்தனைகள் அடங்கிய நோட்டீஸ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. தக்கலை பேருந்து நிலையத்தில் நிலைய அலுவலர் ராஜா நோட்டீஸ்களை பொதுமக்களுக்கு கொடுத்து விதிமுறைகளை எடுத்துக்கூறினார். மேலும் பஸ் மற்றும் கடைகள் தோறும் சென்று விழிப்புணர்வு மக்களுக்கு கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை காவலர் கவிமணி, தீயணைப்பு படை வீரர்கள் ஸ்ரீகுமார், சகாய ஜோஸ், சிவ கணேஷ்
கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு முகாம் நிகழ்ச்சி இன்று குமாரகோவில் முதல் பத்மநாபபுரம் வரை நடக்கிறது. இரணியல், வில்லுக்குறி, பரசேரி, மருந்து கோட்டை, வேர்கிளம்பி, மணலிக்கரை, முளகுமூடு, திருவிதாங்கோடு, அழகிய மண்டபம் உட்பட பல பகுதிகளில் வரும் சனிக்கிழமை வரை நடக்கிறது
News