கன்னியாகுமரியில் சுற்றுலா படகுசேவை : சோதனை ஓட்டம் துவக்கம்
Views - 35 Likes - 0 Liked
-
தமிழக முதல்வரின் உத்தரவினையடுத்து சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் படகுசேவை துவங்குவதற்கான சோதனை ஓட்டம் தொடங்கியது.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் 17ம் தேதி முதல் படகுசேவை நிறுத்தப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் கட்டுப்பாட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் அதிகம் கூடும் திருவிழா, சுபகாரியங்கள், அரசியல் கூட்டம் போன்ற இடங்களில் மட்டும் கொரோனா கட்டுபாடுகள் தொடர்கிறது.
சுற்றுலா தலங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுபாடுகள் தொடர்வதால் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. நாட்டின் தென் எல்லையும், சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் இல்லாததால் சுற்றுலா தொழிலை நம்பி இருந்த பலர் மாற்றுத்தொழிலுக்கு செல்லும் நிலை தொடர்கிறது. இதனையடுத்து சுற்றுலா தொழிலை மேம்படுத்தும் வகையில் கன்னியாகுமரியில் படகுசேவை தொடங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடப்பட்டது.
இந்நிலையில் குமரிமாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கன்னியாகுமரியில் படகுசேவை உடனடியாக தொடங்கப்படும் என்று உத்தரவிட்டார். இதனையடுத்து பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுசேவை தொடங்குவதற்கான சோதனை ஓட்டம் தொடங்கியது.
News