" “If opportunity doesn't knock, build a door.”"

குமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகை வீதி எங்கும் விழாக்கோலம்

Views - 271     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாரம்பரிய முறைப்படி கொண்டாட தயாராகி வருகின்றனர்.

    இதனால் கடைவீதிகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25 ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. தீபாவளி பண்டிகை வரும் 14 ம் தேதி வருகிறது. கொரோனா தொற்றில் இருந்து படிப்படியாக மாறி வந்தாலும் இயல்பு நிலைக்கு இன்னும் வரவில்லை. தொழில் முடக்கத்தில் இருந்து தற்போது தான் சற்று தொழில்கள் நடக்க துவங்கி உள்ளது. ஊரடங்கால் அடைக்கப்பட்ட நிறுவனங்கள் தற்போது தான் செயல்பட துவங்கி உள்ளது. தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய முழு சம்பள தொகைகளையும் கொடுக்க முடியாமல் பல நிறுவனங்கள் திண்டாடி வருகிறது. தொழிலாளர்கள் தற்போது கிடைக்கும் வருமானத்தை வைத்து கொண்டு எப்படி பண்டிகையை கொண்டாடலாம் என்று கணக்கு போட்டு செயல்பட்டு வருகின்றனர். வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை முதல் அனைத்து பண்டிகை கால பொருட்கள் விற்பனை வரை ஆபர்களை அறிவித்து விற்பனையை பெருக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்கும் பண்டிகை கால சிறப்பு விற்பனையில் தங்களுக்கு தேவையான ஏதாவது ஒரு பொருட்களையாவது வாங்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஆலயங்கள், மசூதிகளில் அரசு விதிமுறைகள் படி வழிபாடுகள், தொழுகைகள் நடந்து வருகிறது. பண்டிகைகள், விழாக்களும் பாரம்பரிய முறைப்படி அரசின் விதிமுறைகளை பின்பற்றி நடந்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பட்டாசுகள், புத்தாடைகள், இனிப்பு வகைகள், வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்காக கடைகளுக்கு மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். நாகர்கோவில் பகுதிகளில் வாகன நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. பஸ்களில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. அரசின் விதிமுறைகளை பின்பற்றி தீபாவளி பண்டிகையை பாரம்பரிய முறைப்படி இருக்கும் வருவாய்க்கு ஏற்றார்போல் கொண்டாட வேண்டும் என்ற நிலையில் பொருட்கள் வாங்க கடைகளை நோக்கி வர துவங்கி உள்ளனர். அரசு அறிவித்துள்ள நேரத்தில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்பதிலும் தீவிரமாக உள்ளனர்.

    News