அஞ்சுகிராமம் பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கு பகவதிபுரத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு அஞ்சுகிராமம் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சாய்ராம், பேரூர் துணைச் செயலாளர் ஆர்வி சுந்தர்ராஜ், மாவட்ட துணை செயலாளர் முத்துசாமி, முன்னாள் அஞ்சுகிராமம் பேரூராட்சி மன்றத் தலைவர் வேலாயுதம் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆஸ்டின் எம்எல்ஏ புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். திமுக நிர்வாகிகள் ஒன்றிய துணைச் செயலாளர் தேரூர் ஐயப்பன், அழகை ஐயப்பன், தேரூர் முத்து, ஜெயக்கொடி, பாலன், சுயம்பு, ராஜேந்திரன், ஜாண், குருமார்த்தாண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.