ஆபத்தான பேனர்களை இன்று பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற வேண்டும் - ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள்
Views - 22 Likes - 0 Liked
-
வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் அரசு தயாராகி வருகிறது. .இந்நிலையில் “சென்னையில் ஆபத்தான நிலையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் மற்றும் பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், பிற்பகல் 12 மணிக்கு முன்பாக அகற்ற உரிமையாளர்கள் முன்வர வேண்டும்” என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.News