உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பயணம் குமரியில் நிறைவு
Views - 45 Likes - 0 Liked
-
இளைஞர்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காஷ்மீரில் தொடங்கிய சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் நிறைவடைந்தது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் விவேக் ஷா. ஆடிட்டராக பணிபுரிந்து வரும் இவர் இளைஞர்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜம்மு காஷ்மீரில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கி பல்வேறு மாநிலங்கள் வழியாக ஏழு நாட்கள் 12 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 664 கி.மீட்டர் தூரத்தை கடந்து கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நிறைவு செய்தார். கின்னஸ் சாதனையில் இடம் பெறுவதற்காகவும், இளைஞர்களிடையே உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இந்த பயணத்தை மேற்கொண்டு 12 மாநிலங்களை கடந்து கன்னியாகுமரி வந்து சேர்ந்ததாக தெரிவித்த அவர், வரும் 2021 ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று அங்கு 4900 கிலோமீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து சாதனை புரிய உள்ளதாக கூறினார்.
News