மலையோர பகுதிகளில் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் தண்ணரீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருவதால் கோதையாற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக குழித்துறை தாமிரபரணி ஆற்றில் பாயும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதனால், திற்பரப்பு நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களாக மேற்கு மாவட்ட பகுதிகளில் உள்ள மலை பகுதிகளில் தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கொரோனா தொற்று காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஊரடங்கிற்கு பின் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் இதுவரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படாததால் அருவியில் குளிக்க இயலாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.