அழகியமண்டபத்தில் கன்னியாகுமரி மாவட்ட வரலாறு நூல் வெளியீட்டு விழா
Views - 31 Likes - 0 Liked
-
அழகியமண்டபத்தில் கன்னியாகுமரி மாவட்ட வரலாறு நூல் வெளியீட்டு விழா நடந்தது. மார்த்தாண்டம் நேசமணி கிறிஸ்தவ கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஐசக் ஜெயதாஸ் இவர் சுற்றுலா ஆவணக்காப்பகம், தமிழக வரலாறு, அழகியமண்டபம் திருச்சபை வரலாறு, கன்னியாகுமரி மாவட்டமும், இந்திய சுதந்திர போராட்டமும், மனித புனிதர் அன்னை தெரசா நூல்களை எழுதியுள்ளார் .
தற்போது கன்னியாகுமரி மாவட்ட வரலாறு நூல் வெளியீட்டு விழா அழகியமண்டபம் சிஎஸ்ஐ ஆலயத்தில் நடந்தது. விழாவுக்கு சேகரத்து போதகர் யோனத்தான் தலைமை தாங்க சபை போதகர் பிரைனால்டு டேனியல் முன்னிலை வகித்தார். குமரி சிஎஸ்ஐ பேராயர் செல்லையா நூலை வெளியிட்டார் போதகர்கள் பாக்கியநாதன் ஜாண்ரோஸ் சபை பொருளாளர் ஜோசப் ராஜகுமார், திருவிதாங்கோடு டவுண் பஞ்., செயலாளர் வினிதா, ஜெபமலர் பெற்றுக்கொண்டனர். பேராய செயலாளர் பைஜி நிஷித்பால், கிறிஸ்துதாஸ், ஜெபகுமார், ஜெஷிலா பால்ராஜ், ஜெபர்சன் கலந்து கொண்டனர். நூலாசிரியர் ஐசக் ஜெயதாஸ் நன்றி கூறினார்.
News