கலவை மருத்துவத்தை கைவிட கோரிக்கை
Views - 53 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி மாவட்ட அனைத்து மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலவை மருத்துவத்தை கைவிட கேட்டும், இதற்காக ஏற்படுத்தப்பட்ட 4 குழுக்களை கலைக்க வேண்டும், நவீன மருத்துவத்தை அரசாங்கமும் தேசிய மருத்துவ குழுமம் பாதுகாக்க வேண்டும், உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அகில இந்திய மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் டாக்டர் விஜயகுமார் தலைமை வகித்தார். டாக்டர்கள் ராதாகிருஷ்ணன், பிரவின், பிரதீப் உட்பட டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News