ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்
Views - 46 Likes - 0 Liked
-
கன்னியாகுமரி மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் ஓய்வுபெற்ற காவலர்கள் இறந்தால் கேரளாவைப் போல் அரசு மரியாதை செலுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தக்கலையில் நடந்த கன்னியாகுமரி மாவட்ட ஓய்வுபெற்ற காவலர் நலச்சங்க கூட்டத்திற்கு தலைவர் பென்சிகர் தலைமை வகித்தார். துணை தலைவர் சுந்தர்ராஜ், பொருளாளர் பாலசுப்பிரமணியன், ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற சப்இன்ஸ்பெக்டர் பென்னட் ராஜ் வரவேற்றார். ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் கிருஷ்ணகுமார் சங்க செயலாளர் சுகுமாரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற காவலர்கள் பங்கேற்றனர். நேசமணி நன்றி கூறினார். ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தக்கலையிலுள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ஆகியவைகளை தூய்மைபணி செய்வது எனவும், ஆயுதபடையில் அமைந்திருக்கும் கேண்டினில் மருந்தகம் அமைக்க வேண்டும், ஓய்வுபெற்றவரிடமிருந்து ஹெல்த் இன்சூரன்ஸ் பணம் பிடிக்கக்கூடாது எனவும், இன்சூரன்ஸ் போட்டபின் நோய்வாய்பட்டவர்களின் அனைத்து செலவுகளையும் இன்சூரன்ஸ் வழி கிடைக்க வழிசெய்ய வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
News