" Only I can change my life."

கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு- கடற்கரை களை கட்டியது

Views - 123     Likes - 0     Liked


  • இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ளது கன்னியாகுமரி. இதுஒரு உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமாகும். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்படும்.

    இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இதுமட்டுமின்றி ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறை சீசனை யொட்டியும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் காணப்படும்.

    இங்கு தினமும் 10 ஆயிரம் முதல் 17 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வரை வந்து செல்வார்கள். சீசன் நேரங்களில் தினமும் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வரை வந்து செல்கிறார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 8 மாதகாலமாக இங்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து இங்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் வர தொடங்கி உள்ளனர். குறிப்பாக சனி மற்றும் ஞயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை காலங்களிலும் பண்டிகை விடுமுறை காலங்களிலும் கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று கன்னியாகுமரிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது. இதனால் காலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காணவும், மாலையில் சூரியன் மறையும் காட்சியை காணவும் கடற்கரையில் கூட்டம் அலைமோதியது. இதனால் கடற்கரை களை கட்டியது.

    இதுதவிர கன்னியாகுமரியில் உளள சுற்றுலா தலங்களான பகவதி அம்மன் கோவில், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், 133 அடி திருவள்ளுவர் சிலை, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மியூசியம், அரசு அருட்காட்சி யகம், மீன்காட்சி சாலை, கடற்கரை சுனாமி நினைவு பூங்கா, பேரூராட் சிக்கு சொந்தமான கடற்கரை பொழுது போக்கு பூங்கா, வட்டக்கோட்டை கடற்கரை போன்ற அனைத்து சுற்றுலா தலங்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    News