கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ந்தேதி வரை நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்புகொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ந்தேதி வரை நீட்டிப்பு மத்திய அரசு அறிவிப்புகொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ந்தேதி
Views - 22 Likes - 0 Liked
-
புதுடெல்லி:இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மார்ச் மாதம் இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் கொரோனா பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக சரிந்து வருகிறது. அதே நேரத்தில் இங்கிலாந்தில் உருமாறி தாக்கும் புதிய வகை கொரோனா வைரசால் அச்சம் எழுந்து உள்ளது.புதிய வகை கொரோனா தொற்று பரவிவிடாமல் இருப்பதற்காக மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதன்படி இங்கிலாந்துடனான விமான சேவை வருகிற 31-ந்தேதி வரை ரத்துசெய்யப்பட்டது. மேலும் அந்த நாட்டில் இருந்து வந்தவர்கள் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.இந்த நிலையில், தற்போது அமலில் இருக்கும் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் மற்றும் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. இருந்தாலும் உலக நாடுகளில் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை அவசியம்.எனவே நாட்டில் தற்போதைய கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஜனவரி 31-ந்தேதி வரை நடைமுறையில் இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.News