சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடத்த தீட்சிதர்கள் முடிவு-வீடியோ
Views - 16 Likes - 0 Liked
-
சிதம்பரம்சிதம்பரம் நடராஜர் கோயிலில் இ-பாஸ் நடைமுறைக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இ-பாஸ் முறையை ரத்து செய்தால் மட்டுமே தேரோட்டம் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் பொதுமக்கள் நலன் கருதி தேரோட்டம் நடத்தப்படும் என தீட்சிதர்கள் தற்போது அறிவித்து உள்ளனர். தீட்சிதர்கள் அறிவிப்பை தொடர்ந்து தேரோட்டத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.தேரோட்டம் நடைபெறும் என்ற அறிவிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேரோட்டம் நடைபெறுவதை தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.News