இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள் முன்னிலை
Views - 230 Likes - 0 Liked
-
பிரிஸ்பேன்,இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369 ரன்னில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா (8 ரன்), கேப்டன் அஜிங்யா ரஹானே (2 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இந்திய வீரர்கள் தொடர்ந்து பேட்டிங் செய்தனர்.இந்நிலையில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள் முன்னிலை வகித்து வருகிறது.4-வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 149 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 182 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னரும், மார்க்கஸ் ஹாரிஸும் சிறப்பான தொடக்கத்தை வழங்கினர். 89 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து நிதானமாக விளையாடினர். அவர்களது விக்கெட்டை தாக்கூரும், வாஷிங்டன் சுந்தரும் அடுத்தடுத்து வீழ்த்தினர். 7 பந்துகளில் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியா அணி இழந்தது.தொடர்ந்து வந்த மார்னஸ் லபுஷேன் மற்றும் மேத்யூ வேட் சிராஜின் ஒரே ஓவரில் விக்கெட்டை இழந்தனர். பின்னர் கிரீஸுக்கு வந்த கேமரூன் கிரீனுடன் ஸ்மித் நிதானமாக விளையாடி வருகிறார்.News