கல்லூரிகளில் வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் – உயர்கல்வித்துறை அறிவிப்பு
Views - 36 Likes - 0 Liked
-
கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் 2-ந்தேதி முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. மற்ற மாணவர்கள் ஆன்லைன் மூலமே வகுப்புகளில் பங்கு பெற்று வந்தனர்.இதையடுத்து எப்போது நேரடி வகுப்புகள் தொடங்கும்? கல்லூரி திறப்பு குறித்த அறிவிப்பு எப்போது இருக்கும்? என்று பலரும் எதிர்பார்த்து இருந்தனர்.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டது. அதில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலை, அறிவியல், தொழில்நுட்ப, என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வரும் 8ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில், வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் எனவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
News