தங்கம் விலை பவுனுக்கு ரூ.224 குறைவு
Views - 263 Likes - 0 Liked
-
சென்னை,கடந்த 1-ந் தேதி மத்திய பட்ஜெட் அறிவிப்பின் போது தங்கத்தின் மீதான சுங்க வரி குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி தங்கம் விலை கடந்த 1-ந்தேதிக்கு பிறகு தொடர்ந்து இறங்குமுகத்தில் இருக்கிறது. அந்தவகையில் நேற்றும் தங்கம் விலை குறைந்து காணப்பட்டது.நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 483-க்கும், ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 864-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.28-ம், பவுனுக்கு ரூ.224-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 455-க்கும், ஒரு பவுன் ரூ.35 ஆயிரத்து 640-க்கும் விற்பனை ஆனது.தங்கம் விலை குறைந்த போதெல்லாம் வெள்ளி விலையும் குறையும். அந்தவகையில் கடந்த 2, 3 மற்றும் 4-ந்தேதிகளில் விலை குறைந்து வந்த நிலையில், நேற்று வெள்ளி விலை உயர்ந்திருந்தது. கிராமுக்கு 40 காசும், கிலோவுக்கு ரூ.400-ம் அதிகரித்து, ஒரு கிராம் 72 ரூபாய் 60 காசுக்கும், ஒரு பவுன் ரூ.72 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.News