" Love For All, Hatred For None."

புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர் கல்வித்திட்ட முகாம்

Views - 83     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியம் சார்பில் புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்து உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் நடந்தது.

    முகாமில் கன்னியாகுமரி மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி, சக்தி மகளிர் சுய உதவிக்குழுவுக்கு ரூ. 5 லட்சம் கடன் வழங்கி பேசியதாவது: பயிர்க்கடன், சுயஉதவிக்குழு கடன், சிறுவணிகக்கடன், வீட்டு அடமானக்கடன், கல்விக்கடன், டாம்கோ மற்றும் டாப்செட்கோ போன்ற கடன்களையும் விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் கூட்டுறவுச்சங்கங்கள் மூலம் விநியோகப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் 447 முழு நேர நியாவிலைக்கடைகளும், 115 பகுதி நேர நியாயவிலைக்கடைகளும், 20 மகளிர் நியாவிலைக்கடைகளும் கூட்டுறவுச்சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வருவதாகவும், கொரோனா ஊரடங்கு காலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000/– வழங்கும் திட்டம், இலவச அத்தியாவசியப்பொருட்கள் வழங்கும் திட்டம் மற்றும் முககவசம் வழங்கும் திட்டங்களை கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்படுத்தியுள்ளது. அம்மா மருந்தகம், கூட்டுறவு மருந்தகங்கள் மூலம் 20 சதவீதம் தள்ளுபடி விலையில் மருந்துப்பொருட்கள் விற்பனை செய்து வருவதாகவும், பண்ணைப்பசுமை நுகர்வோர் கடைகளை கூட்டுறவு சங்கங்கள் நடத்தி பொது மக்களுக்கு தேவையான காய்கறிகளை விநியோகம் செய்ததாகவும், சட்டபேரவை விதி 110 ன் கீழ் கன்னியாகுமரி மண்டலத்தில் 55 அம்மா நகர்வு நியாயவிலைக்கடைகள் ஆரம்பிக்கப்பட்டு அத்தியாவசியப்பொருட்களை குடும்பஅட்டைதாரர்களின் குடியிருப்புக்கு அருகிலே கொண்டு சென்று விநியோகம் செய்யும் பணியினையும் கூட்டுறவுச்சங்கங்கள் செய்து வருவதாகவும், நியாயவிலைக்கடைகளில் அரசு அறிவித்த அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் துவக்கப்பட்டு 300 வகையான பொருட்களை அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் விற்பனை செய்யும் திட்டத்தினையும் கூட்டுறவு சங்கம் நடைமுறைபடுத்தியது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளர்ச்சி திட்டத்தின் கீழும், தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்தும் கட்டுமானப்பணிக்கு கடன்கள் வழங்கப்பட்டு கூட்டுறவுச்சங்கங்களுக்கு புதிய அலுவலக கட்டிடம் கட்டும் பணி மற்றும் கட்டிடங்களை நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு கூட்டுறவு சங்கங்கள் தற்போது புதுப்பொலிவுடன் செயல்பட்டு வருகின்றன என தெரிவித்ததும். நிகழ்ச்சியில் புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் சாம்ராஜ் வரவேற்று பேசினார். கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் ஸ்டாலின், கன்னியாகுமரி மாவட்ட ஒன்றிய மேலாளர் வில்சன் கலந்து கொண்டனர். மகளிர் சுயஉதவிக்குழு தலைவி ராஜேஸ்வரி புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தால் அடைந்த பயன்கள் குறித்து விளக்கினார். நிகழ்ச்சியில் புத்தேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வகாக்குழு உறுப்பினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். சங்க செயலாளர் ஜாஸ்மின்சலீன் நன்றி கூறினார்.

    News