மேற்கு வங்காளத்தில் 9 முதல் 12- ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று முதல் திறப்பு
Views - 215 Likes - 0 Liked
-
கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு கடந்த மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்டது. முன்னதாக கல்வி நிலையங்களும் மூடப்பட்டன. பின்னர் தொற்று பரவல் குறையத்தொடங்கியதும் பல்வேறு தளர்வுகள் படிப்படியாக அறிவிக்கப்பட்டன. அதன்படி, பள்ளி, கல்லூரிகளும் திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.இதையடுத்து, மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் நிலவும் தொற்று பரவலை பொறுத்து பள்ளிகளை திறந்து வருகின்றன. அந்த வகையில் மேற்கு வங்காளத்தில் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடக்க வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.News