திருச்சியில் மார்ச் 14ஆம் தேதி மாநாடு - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
Views - 7 Likes - 0 Liked
-
தேனியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் மக்களுக்கு என்ன செய்துள்ளார்? தேனி மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகள் எதையும் பன்னீர்செல்வம் நிறைவேற்றவில்லை. துணை முதல்-அமைச்சர் ஓபிஎஸ் 10 ஆண்டுகளாக தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை. முதல்-அமைச்சர் கூடவே இருக்கும் ஓபிஎஸ் அவருக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார். துணை முதல்-அமைச்சர் யாருக்கும் உண்மையாக இல்லை. மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுக்கிறார். திருச்சியில் மார்ச் 14ஆம் தேதி மாநாடு நடைபெறும்.News