"மெட்ரோ ரயில் கட்டணம் குறைப்பு" - முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு
Views - 263 Likes - 0 Liked
-
சென்னை,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைந்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அதன்படி, சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான அதிகபட்ச கட்டணம் ரூ.70-இல் இருந்து ரூ.50 -ஆக குறைக்கப்பட்டுள்ளது.5 கி.மீட்டர் வரை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான கட்டணம் ரூ.20 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.ஞாயிறு மற்றும் விடுமுறை நாள்களில் கட்டணத்திலிருந்து 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த கட்டண குறைப்பு நாளை மறுநாள் திங்கள்கிழமை(பிப்.22) முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுNews