ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு தகுதி
Views - 299 Likes - 0 Liked
-
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டிவிட்ட இந்த தொடரில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ், 5-ம் நிலை வீரரான சிட்சிபாஸ்சை (கிரீஸ்) எதிர்கொண்டார்.இதில் தொடக்கம் முதலே மெட்விடேவ், தனது தாக்குதல் ஆட்டத்தின் மூலம் சிட்சிபாஸ்சுக்கு கடும் நெருக்கடி அளித்தார். 3-வது செட்டில் மீண்டெழுந்து வர சிட்சிபாஸ் முயற்சி எடுத்தார். ஆனால் அதற்கு மெட்விடேவ் இடம் அளிக்கவில்லை.விளம்பரம்2 மணி 9 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் மெட்விடேவ் 6-4, 6-2, 7-5 என்ற நேர்செட்டில் சிட்சிபாஸ்சை வீழ்த்தி முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். சர்வதேச போட்டியில் மெட்விடேவ் தொடர்ந்து பெற்ற 20-வது வெற்றி இதுவாகும். நாளை நடைபெறும் மகுடத்துக்கான இறுதிப்போட்டியில் மெட்விடேவ், 8 முறை சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நோவக் ஜோகோவிச்சை (செர்பியா) சந்திக்கிறார்.வெற்றிக்கு பிறகு மெட்விடேவ் கூறுகையில், ‘இந்த வெற்றி எளிதாக வந்துவிடவில்லை. ரபெல் நடாலுக்கு எதிரான கால்இறுதி ஆட்டத்தில் முதல் 2 செட்களை இழந்ததுடன் 3-வது செட்டில் சரிவில் இருந்து மீண்டு வந்து அவரை சிட்சிபாஸ் வீழ்த்தினார். இதனால் நான் லேசான பயத்துடனும், இறுக்கத்துடனும் தான் ஆடினேன். நெருக்கடியான தருணங்களை திறம்பட சமாளித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது சிறப்பான சாதனையாகும்’ என்றார்.முன்னதாக நடந்த பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்)-சபலென்கா (பெலாரஸ்) ஜோடி 6-2, 6-3 என்ற நேர்செட்டில் செக்குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவா-கத்ரினா சினியகோவா இணையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. இருவரும் இணைந்து கைப்பற்றிய 2-வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். ஏற்கனவே 2019-ம் ஆண்டு அமெரிக்க ஓபனில் வாகை சூடியிருந்தனர்.பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகா (ஜப்பான்)-ஜெனிபர் பிராடி (அமெரிக்கா) பலப்பரீட்சை நடத்துகிறார்கள். இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறதுNews