" If you can dream it, you can do it."

எடப்பாடி தமிழக மக்களுக்கு செய்த துரோகத்திற்கு ஏப்ரல் 6-ஆம் தேதி பதிலடி கிடைக்கும். தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றிபெறும்! டாக்டர் சுஜின் ஜெகேஷ் நம்பிக்கை

Views - 71     Likes - 0     Liked


  • கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மருத்துவ அணி துணை அமைப்பாளரும் பிரபல தொழிலதிபருமான டாக்டர்.சுஜின் ஜெகேஷ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகமே தளபதியின் தலைமையில் திமுக ஆட்சி அமைய வேண்டும் என விரும்புகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசால் அடகுவைக்கப்பட்ட தமிழக உரிமைகளை மீட்கக்கூடிய சக்தி படைத்த ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான் என்பதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர். திமுக கூட்டணி ஒரு அணியாகவும் திமுகவை எதிர்க்கும் காட்சிகள் ஒரே அணியாக ஆனால் வெல்வேறு டீம்களாக போட்டியிடுகின்றன. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பது, சாமானிய மக்கள் தினமும் உபயோகிக்கும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கொதிப்படைந்துள்ளார். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை, தூத்துக்குடியில் உரிமைக்காக போராடிய அப்பாவி பொதுமக்களை குருவியை சுடுவதுபோல சுட்டுக்கொன்றது போன்ற காட்சிகள் இன்னும் தமிழக மக்களின் விழி திரைகளில் ஓடிக்கொண்டே இருக்கிறது. தான் ஒரு விவசாயி என கூறிக்கொண்டே சென்னை சேலம் எட்டு வழி சாலை என்ற பெயரில் ஏழை விவசாயிகளிடம் நிலத்தை பறிக்க முயன்று அவர்கள் அழுத அழுகுரல், மத்திய அரசின் விவசாயிகளுக்கு விரோதமான 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து முதல்வர் பழனிச்சாமி பேசிய பேச்சுக்கள் ஒவ்வெரு விவசாயி மனதிலும் இந்த அரசுக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவிசிய பொருட்களின் விலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் ஏறிக்கொண்டே போகிறது. இதற்கு மத்திய அரசை கண்டித்து ஒரு அறிக்கை விடும் துணிவு கூட எடப்பாடி அரசிற்கு இல்லை. ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தாமல் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சில மணிதுளிகளுக்கு முன் வன்னியருக்கு 10.5% இட ஒதுக்கீடு என்ற மசோதா வன்னிய மக்களை இராமதாசும் எடப்பாடி பழனிசாமியும் தேர்தலுக்காக செய்யும் ஏமாற்று வேலை என்பதை சிறு குழந்தை கூட புரிந்துகொள்ளும். இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே அதை செயல்படுத்த முடியும். இந்த லட்சணத்தில் அன்புமணி உணர்ச்சிவசப்பட்டு அழுவது போலவும் அதை சரியான ஆங்கிளில் வீடியோ எடுத்து பரப்புவதும் மக்கள் மத்தியில் நகைப்புக்குரியதாக மாறியுள்ளது. இவர்கள் தமிழக மக்களை இன்னும் முட்டாள்களாகவே நினைத்துக்கொண்டுள்ளார். இதெற்கெல்லாம் ஏப்ரல் 6-ஆம் தேதி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்க தமிழக மக்கள் தயாராகி விட்டனர். மே மாதம் 2-ஆம் தேதி திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி என்ற வரலாற்று சிறப்புமிக்க நற்செய்தி தான் இந்த மக்கள் விரோத பாசிச பாஜக -அதிமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் கொடுக்கப்போகும் சரியான தண்டனை.

    News