புனித வியாகுல அன்னை ஆலயவிழாவில் நற்கருணை பவனி
Views - 280 Likes - 0 Liked
-
தேவசகாய மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய விழாவில் நற்கருணை பவனி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
ஆரல்வாய்மொழி,
தேவசகாய மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய விழாவில் நற்கருணை பவனி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.தேவசகாயம் மவுண்ட்ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா கடந்த 19-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, இரவு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடந்தன.விழாவில் நேற்று காலையில் திருப்பலியும், மாலையில் ஜெபமாலை, புகழ் மாலை நடைபெற்றது. தொடர்ந்து நடந்த திருப்பலியில் ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை ரால்ப்கிராண்ட் மதன் தலைமை தாங்கினார். பனவிளை பங்குத்தந்தை ஜார்ஜ் பொன்னையா மறையுரையாற்றினார். பின்னர் நற்கருணை பவனி நடைபெற்றது. இதில் சிறுவர், சிறுமிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.பரிசுதொடர்ந்து கத்தோலிக்க சங்கம் சார்பில் பொதுக்கூட்டமும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. சங்கத்தலைவர் சகாயபென்சிகர் தலைமை தாங்கினார். பங்கு தந்தை பிரைட், வட்டாரபேரவை தலைவர் ஜேக்கப் ்மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . நிகழ்ச்சியில் 8, 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.மேலும் நோயுற்ற ஏழைகளுக்கு நிதியுதவி வழங்கப் பட்டது. இதில் பங்குபேரவை துணைத் தலைவர் மிக்கேல், செயலாளர் தேவசகாய மைக்கிள்ராஜ், துணைச்செயலாளர் சகாயரூபிலெட் மற்றும் பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.News