" If you can dream it, you can do it."

மீண்டும் பிரச்சினையை ஏற்படுத்தும் ஜி -23 காங்கிரஸ் தலைவர்கள்; பிரதமரை பாராட்டிய குலாம் நபி ஆசாத்

Views - 71     Likes - 0     Liked


 • காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கும், அக்கட்சியின் 23 அதிருப்தி தலைவர்களுக்கும் இடையேயான கருத்து வேறுபாடு இறுதி கட்டத்தை  எட்டியுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவு வெளியாகும் மே 2ம் தேதிக்கு பிறகு, கட்சி தலைமை விஷயத்தில் முக்கிய முடிவு எட்டப்பட இருப்பதாக  தகவல்கள் வெளியாகி உள்ளன.

  காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி செயல்பட்டு  வருகிறது. இதில், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்துள்ளன. சோனியா காந்தி உடல்நலக் குறைபாட்டால் தனது அரசியல்  பணிகளை குறைத்துக் கொண்ட நிலையில், கட்சிக்கு இன்னும் நிரந்த தலைவர் தேர்வு செய்யப்படாமல் உள்ளது. சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக இருக்கிறார், ஆனால் தேர்தல் பிரச்சாரத்தை ராகுல் காந்தி வழி நடத்துகிறார்.
   
  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கும், காங்கிரஸ் அதிருப்தி தலைவர்கள் 23 பேருக்கும் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது.. 5 மாநில  தேர்தல் முடிவுக்குப் பிறகு ராகுல் கட்சிக்கு கட்டாயம் தலைமை ஏற்க வேண்டிய  நிர்ப்பந்தம் ஏற்படலாம்,  இதனால், கட்சி தலைமை விவகாரத்தில் மே 2ம் தேதி இறுதி முடிவு எடுக்கும் நாளாக  அமைந்துள்ளது.
   
   விரைவில் நடக்க உள்ள 5 மாநில தேர்தல் தான் காங்கிரசில் காந்தி குடும்பத்தின்  எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ராகுல், பிரியங்கா தலைமையில் தேர்தல் வெற்றியை காட்ட வேண்டிய  கட்டாய சூழல் வந்துள்ளது. கருத்துக்கணிப்புகளை பொறுத்த வரையில் தமிழ்நாட்டில் மட்டுமே திமுக தலைமையில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி  வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மற்ற மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி கேள்விக்குறிதான்.
   
   ஜி -23 என  குறிப்பிடப்படும் 23  காங்கிரஸ் தலைவர்களைக் கொண்ட அதிருப்தி குழு, கடந்த வார இறுதியில் ஜம்முவில் ஒரு கூட்டம் நடத்தினர். அதில் காங்கிரசின் பொறுப்பை ஏற்கக்கூடிய தலைவராக குலாம் நபி ஆசாத்தின் பெயரை கிட்டத்தட்ட முன்மொழிந்தார்கள்.
   
  குலாம் நபி ஆசாத் தலைமையிலான தன்னார்வ தொண்டு நிறுவனமான காந்தி குளோபல்  ஏற்பாடு செய்திருந்த இந்த  கூட்டத்தில் கபில் சிபல், ஆனந்த் சர்மா, பூபிந்தர் சிங் ஹூடா, மனிஷ் திவாரி, ராஜ் பப்பர் மற்றும் விவேக் தங்கா உள்ளிட்ட பல ஜி -23 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
   
  இந்த கூட்டத்தில் பேரணியில், குலாம் நபி ஆசாத் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார்.  பிரதமர் மோடி தன் உண்மையான சுயத்தை" மறைக்கவில்லை என்று பாராட்டினார்
   
  நரேந்திர மோடியிடமிருந்து மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும், அவர் பிரதமரான போதிலும், அவரது வேர்களை மறக்கவில்லை. அவர் பெருமையுடன் தன்னை டீ விற்பவர்  என்று அழைக்கிறார்  . அவர நமதுஅரசியல் போட்டியாளராக இருந்தாலும்  அவர் தனது உண்மையான சுயத்தை மறைக்கவில்லை என்பதை நான் பாராட்டுகிறேன். 
   
  நான் மாநிலங்களவையில் இருந்து ஓய்வு பெற்றிருக்கலாம், ஆனால் நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற மாட்டேன் என்றும் கூறினார்.
   
  கபில் சிபல் பேசும் போது ஆசாத் நாடாளுமன்றத்திலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்பதை அறிந்ததும் நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். அவர் ஓய்வு பெறுவதை நாங்கள் விரும்பவில்லை. குலாம் நபி ஆசாத்தின் அனுபவத்தை கட்சி ஏன் பயன்படுத்தவில்லை என்று எனக்குத் தெரியவில்லை என கூறினார்.
   
  ஆனந்த் சர்மா பேசும் போது நாங்கள் ஆசாத்துடன் இருக்கிறோம் என்ற செய்தியை அனுப்ப இங்கு வந்துள்ளோம். மக்கள் எந்தவிதமான குழப்பத்திலும் இருக்கக்கூடாது. ஆசாத் ஓய்வு பெறவில்லை. அவர் அரசு ஊழியராக பணியாற்றவில்லை அவ்வளவுதான் என கூறினார்.
   
  இந்த நிலையில் இந்த கூட்டம் குறித்து   ஜம்மு காங்கிரஸ் தலைவர்  குலாம் அஹ்மத் மிர்டெல்லியில் உயர்மட்ட தலைவர்களை  சந்தித்தார். அவர் பொதுச் செயலாளர் (அமைப்பு பொறுப்பாளர்) கே.சி.வேணுகோபால் மற்றும் மாநில பொறுப்பாளர் ரஜ்னி பாட்டீல் ஆகியோரை சந்தித்துள்ளார்.
   
  ஞாயிற்றுக்கிழமை ஆசாத்தின் கருத்துக்களால் மாநில காங்கிரஸ்  அதிர்ந்து போயுள்ளதாகவும், அதன் காரணமாக அரசியல் உணர்வுகள் புண்பட்டுள்ளதாகவும் மிர் கட்சித் தலைவர்களிடம் கூறினார்.
  News