காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராகசாமுவேல் ஜார்ஜ் போட்டி மனு
Views - 28 Likes - 0 Liked
-
மார்த்தாண்டம் பம்மத்தை சேர்ந்தவர் டாக்டர். சாமுவேல் ஜார்ஜ் கலையரசர். இவர் காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவராக உள்ளார். மேலும், காங்கிரஸ் மாவட்ட பொருளாளர், மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் போன்ற பொறுப்புகள் வகித்துள்ளார். இவர் விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருந்தார். கட்சி தலைமை தனக்கு வாய்ப்பு அளிக்கும் என எதிர்பார்த்திருந்தார். ஆனால் காங்கிரஸ் வேட்பாளராக விஜயதரணி எம்.எல்.ஏ. அறிவிக்கப்பட்டார்.இதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர். சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் நேற்று காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டி மனு தாக்கல் செய்தார். இதற்காக அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தனது ஆதரவாளர்களுடன் குழித்துறையில் இருந்து ஊர்வலமாக சென்று விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாதவனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.இதேபோல் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜய்வசந்த் போட்டியிடும் நிலையில், காங்கிரஸ் கட்சியில் மீனவரணி நிர்வாகியான சபீன் என்பவர் சுயேச்சையாக நேற்று கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.News