அசாமில் தொடரும் நிலடுக்கம்: ரிக்டரில் 2.8 ஆக பதிவு
Views - 258 Likes - 0 Liked
-
அசாமின் மோரிகாவன் நகரில் இன்று காலை 6.13 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 2.8 ஆக பதிவாகி உள்ளது. இதனை தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதுகாப்பு நிறைந்த இடங்களில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.அசாமின் தேஜ்பூர் நகரமருகே நேற்று காலை 10.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.6 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில், அசாமில் இன்று 2வது நாளாக மீண்டும் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.News