இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து சென்றது
Views - 227 Likes - 0 Liked
-
லண்டன்,குடும்பத்தினர் உடன் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் இந்திய கேப்டன் கோலி தனது மனைவி மற்றும் குழந்தையையும் அழைத்து சென்றார். நேற்று லண்டன் சென்றடைந்த இந்திய வீரர், வீராங்கனைகள் அங்கிருந்து உடனடியாக சவுத்தம்டனுக்கு அழைத்து செல்லப்பட்டு, மைதான வளாகத்தில் உள்ள ஓட்டலில் தங்கவைக்கப்பட்டனர். இங்கு சில தினங்கள் தனிமைப்படுத்தப்படும் இந்திய அணியினர் அதன் பிறகு பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.இந்திய ஆண்கள் அணி முதலில் சவுத்தம்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்தை வருகிற 18-ந்தேதி எதிர்கொள்கிறது. இதே போல் மிதாலிராஜ் தலைமையிலான இந்திய பெண்கள் அணி வருகிற 16-ந்தேதி பிரிஸ்டலில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் மோதுகிறது.News