கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைப்பு
Views - 248 Likes - 0 Liked
-
சென்னை,சென்னை தனியார் பள்ளியின் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் ஆன்லைன் வகுப்புகளுக்கு என முறையான விதிமுறைகள் இருக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி கலை, அறிவியல் கல்லூரிகள், கல்வியியல் கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க, கல்லூரிக் கல்வி இயக்குநர் பூர்ணசந்திரன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.மேலும் 7 பேர் கொண்ட குழு வரும் 11ஆம் தேதிக்குள் வரைவு அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கலை, அறிவியல் கல்லூரிகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேரடி வகுப்புகளைப் போன்று, ஆன்லைன் வகுப்புகளிலும் உடை அணிதல் வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.News