" “If opportunity doesn't knock, build a door.”"

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட்: முதல் இன்னிங்சில் 97 ரன்களுக்கு சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்

Views - 286     Likes - 0     Liked


  • வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி தென்ஆப்பிரிக்கா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் செயின்ட் லூசியாவில் நேற்று தொடங்கியது.

     
     
     
    டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் கிரேக் பிராத்வெய்ட் மற்றும் ஷாய் ஹோப் களமிறங்கினர். 
     
    ஹோப் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நோர்டியா பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த போனருடன் கேப்டன் பிராத்வெய்ட் ஜோடி சேர்ந்தார். ஆனால், 15 ரன்கள் எடுத்திருந்த பிராத்வெய்ட்டையும் நோர்டியா வெளியேற்றினார். போனர் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரபாடா வெளியேற்றினார். அடுத்துவந்த ரோஸ்டனை 8 ரன்னில் லுங்கி இங்கிடி வெளியேற்றினார்.
     
    பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அன்ரிச் நோர்டியா மற்றும் லிங்கி இங்கிடி பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் ஆகி வெளியேறினர். இதனால், முதல்நாள் ஆட்டத்தின் 40.5 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் ஹோல்டர் அதிகபட்சமாக 20 ரன்கள் எடுத்தார்.
     
    தென் ஆப்பிரிக்கா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய  லிங்கி இங்கிடி 5 விக்கெட்டுகளையும் அன்ரிச் நோர்டியா 4 விக்கெட்டுகளையும், ரபாடா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
     
    இதையடுத்து, தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் மற்றும் அடன் மார்க்ரம் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
     
    5 பந்துகளை சந்தித்த டீன் எல்கர் ரன் எதுவும் எடுக்காமல் (0) ரோச் பந்துவீச்சில் வெளியேறினார். அடுத்துவந்த பீட்டர்சென் - மார்க்ரமுடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
     
    பீட்டர்சன் 19 ரன் எடுத்த நிலையில் சீல்ஸ் பந்துவீச்சில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய அடன் மார்க்ரம் அரைசதம் கடந்தார். அவர் 60 ரன்கள் எடுத்திருர்ந்த நிலையில் சீல்ஸ் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 
     
    பின்னர் களமிறங்கிய ரைசி வென் டர் டஸ்சன் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவருடன் களமிறங்கிய வென்னி 6 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். இதையடுத்து, விக்கெட் கீப்பர் குவிண்டன் டிகாக் களமிறங்கினார். 
     
    தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணியின் ரைசி வென் டர் டஸ்சன் 34 ரன்னுடனும் குவிண்டன் டிகாக் 4 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இதன் மூலம், தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை விட 31 ரன்கள் முன்னிலையில் உள்ளது. 
     

     

    News