டெல்லியில் பருவமழை; பல பகுதிகளில் வெப்பம் தணிந்தது
Views - 250 Likes - 0 Liked
-
புதுடெல்லி,வடஇந்திய பகுதிகளான ராஜஸ்தான், உத்தர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. எனினும் டெல்லியில் நேற்று காலை வரை மழை பொழிவு இல்லை.டெல்லியில் கோடை கால தொடர்ச்சி மற்றும் கடும் வறட்சி ஆகியவற்றால் பல பகுதிகளிலும் கடுமையான குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு பா.ஜ.க. தொண்டர்கள் அரசுக்கு தங்களது எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.எனினும், நண்பகலுக்கு பின்னர் மழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. இதனால் மக்கள் ஆவலுடன் மழையை எதிர்பார்த்திருந்தனர்.இந்த நிலையில், டெல்லியில் இன்று காலை ஷாஜகான் சாலை, அக்பர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை பெய்ய தொடங்கியது. இதனால் சாலையில் வாகனங்கள் வெளிச்சத்திற்காக காலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன.News