" “If opportunity doesn't knock, build a door.”"

சர்வதேச MSME தினத்தை முன்னிட்டு ‘MSME Honors’ என்ற கௌரவ விருதை TALLY Solutions அறிமுகப்படுத்தி உள்ளது

Views - 276     Likes - 0     Liked


  • தமிழகத்தில் TALLY MSME கௌரவம் பெற்றவர்கள்
    சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்முனைவர்களே எந்த ஒரு தேசத்தின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு முக்கிய பங்களிப்பாளார்களாக இருப்பார்கள். இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பும் அவர்களே. இத்தகைய MSME-க்கு தேசம் முழுவதும் பரவி உள்ளார்கள். மேம்போக்காக  பார்த்தால், அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருந்தாலும், அவர்கள் அனைவரும் பன்முகத்தன்மைக்கு உதாரணங்களாக உள்ளார்கள்.
    சர்வதேச MSME தினத்தை முன்னிட்டு, வணிக நிர்வாகம், சிறு மற்றும் நடுத்தர தொழில் (SMBs) நிர்வாக தீர்வுகள் அளித்து வரும் முன்னணி மென்பொருள் உற்பத்தியாளரான TALLY Solutions, முதல் முறையாக ‘MSME Honors’ என்ற கௌரவ விருதை அறிமுகப்படுத்தி உள்ளது. அடித்தட்டு அளவில் MSME-க்களுக்கு நேர்மறை தாக்கம், அதன் பன்முகத்தன்மை, இடைவிடாத பங்களிப்பு போன்றவற்றை கௌரவப்படுத்த முனைந்துள்ளது.
     
    இந்த கௌரவ விருது, கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் ஐந்து பிரிவுகளில் கொடுக்கப்படுகிறது.
    வியாபார அனுபவஸ்தர்கள்: காலத்தின் சோதனைகளை தாங்க, தொடர்ந்து முன்னேறிவரும் திடமானவர்கள்.
    டிஜிட்டல் மாற்றங்கள்: புதிய தெழில்நுட்பம் மற்றும் டிஜிட்டலை பேச்சில் ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் அதனை அங்கீகரித்தல்.
    MSME களில் அதிசய பெண்கள்: வழக்கமான வகைகளில் இருந்து மாறுபட்டு, நம்பிக்கையுடன் வியாபாரத்தில் புது பயணம் மேற்கொண்ட பெண் தொழில்முனைவோர்களை அங்கீகரித்தல்.
    சமூக ஆதரவாளர்கள்: சோதனைகாலங்களில் தனது லாபத்தைவிட சமூக உதவியை முக்கியமானதாக கொண்டவர்கள்.
    புதுமை சின்னங்கள்: மாற்றங்களுக்கு வழிவகுக்கும் புதுமைகள் மற்றும் யோசனைகள்.
     
    அனைத்து பிரிவுகளிலும் 700 பரிந்துரைகள் பெற்று முதலாவது MSME கௌரவ விருதுகள் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. முதலில்  இந்த பரிந்துரைகளை முதலில் TALLY-யின் குழு ஒன்று பரிசிலினை செய்து பின்னர் சிகி அதூல் குப்தா, ICAI-இன் முன்னாள் தலைவர், BC பாரதியா, CAIT தலைவர் புலக் பாஜ்பைய், dainikbhaskar.com துணை ஆசிரியர் மற்றும் வணிக பிரிவு தலைவர் ஆகிய மதிப்பிற்குரிய நடுவர் குழு பரிசிலித்தது. பல்வேறு மண்டலங்கள் மற்றும் பிரிவுகளில் இந்த குழு 80 பேரை தேர்வு செய்தது. தமிழகத்தில் இந்த விருது பெற்றவர்கள் விவரம்.
     
    கோவை Fisher Pumps P Ltd-இன் திரு.பார்திபன் ராமசாமி 
    பிரிவு: Idea Icons
    மருத்துவர் மற்றும் முன்கள சுகாதார பணியாளர்களின் உயிர்களை பாதுகாக்கும் புதுமையான தயாரிப்பை இவர் கண்டுபிடித்துள்ளார். இவர்கள் தயாரித்த AIRPRO- Powered Air Purifing Respirator 99.9% தூய காற்றை அளித்தல், கண்கள், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை முழுமையாக பாதுகாத்து, முககவசம் தேவையான அளவு காற்றழுத்தத்துடன் இருக்க இது உதவுகிறது. OVID-19 போராட்டத்தில் இவர்கள் தயாரித்த PPE சாதனம் மிகவும் பாதுகாப்பானதாக விளங்குகிறது. நோயாளிகளுக்கு மிக அருகில் இருந்து பணியாற்ற வேண்டிய நிலையில் இருந்து சர்ஜன்கள், ணிழிஜி டாக்டர்கள் மற்றும் பல்டாக்டர்களுக்கு இது உதவிகரமாக இருந்தது.
     
    கோவை Mahendra Pumps Pvt Ltd-இன் திரு.மகேந்திரா ராமதாஸ்
    பிரிவு: Business Veterans
    1960-ல் தொடங்கப்பட்ட மகேந்திரா பம்புஸ் நிறுவனத்துக்கு விவசாய மோட்டார் மற்றும் பம்புகள் உற்பத்தியில் சுமார் 60 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. மோட்டார்கள் மற்றும் பம்புகள் பிரிவில் தலைவராக விளங்கும் வகையில் பல்வேறு வகையான புதுமையான முயற்சிகளை இவர்கள்மேற்கொண்டுள்ளார்கள். சிறந்த வாடிக்கையாளர் அனுபவம், வெளிப்படையான வியாபாரம் மற்றும் பல்வேறு வகையான சிறந்த தொழீல் முயற்சிக்கு ஆகியவற்றில் சிறந்த செயல்திறன், மதிப்பு மற்றும் நம்பிக்கை போன்றவை இவர்களின் சிறந்த வெற்றிக்கு உதாரணமாக விளங்குகிறது. 1980 முதல் 350% வளர்ச்சி அடைந்து, பல்வேறு கிளைகளை தொடங்கி உள்ளனர்.
     
    சென்னை ISEO Systems Pvt Ltd-இன் Mr.ஜேசுராஜ் சாண்டியாகோ மற்றும் Ms.திவ்யா டோனா
    பிரிவு: Business Veterans
    ISEO என்பது நம்பிக்கையின் HR அவுட்சோர்சிங் கம்பினியாகும், சிறந்த மூலோமய ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் அளித்து விரைவான எளிதான மற்றும் செலவு குறைந்த தீர்வுகளை வழங்குகிறார்கள். சென்னையில் இவர்களுக்கு 5 ஏக்கர் அளவில் அமைந்துள்ள சொந்த வளாகம் உள்ளது. Contract Staffing மற்றும் Out Bound Training ஆகியவற்றில்  ஈடுபட்டு, இந்த தொற்றுநோய் காலத்தில் அவர்கள் நீடித்து வருகிறார்கள். வேலையில் இளம்வயதி¬ருக்கு திறனூட்ட அவர்களுக்கு பல்வேறு தொழில்வாய்ப்புகள் அளித்து தங்களது வருமானத்தை பலமடங்கு உயர்த்தி உள்ளனர்.
     
    சென்னை Classle Knowledge Private Limited-இன் திரு.வைத்தியநாதன்
    பிரிவு: Digital Transformers
    பள்ளிக்கூடங்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எளிமையான கட்டுப்படக்கூடிய, நடைமுறை உலக திறன்களை Classle அளிக்கிறது. குழந்தைகளுக்காக இவர்கள் தயாரித்த SkiLLNet என்ற தயாரிப்பு புதுமையான வகையில் கற்றுக்கொள்ள உதவுகிறது. தற்போது KYYIL App என்ற பெயரில் Android-ல் கிடைக்கிறது. உலகம் முழுவதும் இந்த சேவையை விரிவுபடுத்தி உள்ளனர்.
     
     
    சேலம் Idham Creations Private Limited-இன் Ms.மாலினி
    பிரிவு: Wonder Women
    மகளிர் தங்களது மாதவிடாய் காலத்தில் கஷ்டப்படக்கூடாது என்ற நோக்கில் இவரது இடைவிடாத முயற்சியால் இன்று, இவரது Rebelle என்ற பிராண்ட் நாடு முழுவதும் 900-க்கும் மேற்பட்ட பெண்களை சென்றடைந்துள்ளது. Rebelle என்பது மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய சேனிட்டரி நாப்கின். இது நீடித்திருக்கும் வகையில் துணியை கொண்டு செய்யப்பட்ட நாப்கின் ஆகும்.
     
     
    சென்னையின் SRIKOLHAPURI-The Doll Factory-இன் Ms.நிஷா ஸ்ரீகாந்த்
    பிரிவு: Wonder Women
    பாரம்பரிய முறையில் பொம்மை உற்பத்தி செய்வதை மறுபரிசிலினை செய்ய வேண்டும் என்ற உள்ளவர்களுக்கு ஆர்வமே விs.நிஷாவை - SRIKOLHAPURI-The Doll Factory என்ற நிறுவனத்தை உருவாக காரணமாக அமைந்தது. இது ஆடைகளாலான பொம்மைகளை உற்பத்தி செய்கிறது மற்றும் ஏற்கனவே செய்யப்பட்ட பொம்மைகளை அலங்காரமும் செய்து கொடுக்கிறது. நிஷா IIM-ல் பட்டம் பெற்றவர். 2008-ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தை தொடங்கி மூன்று ஆண்டுகளில் 2 மில்லியன் ரூபாய் விற்று முதல் பேற்று சுமார் 100 பெண்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பை அளித்துள்ளது. இநத கலையை பல பெண்களுக்கு இவர் கற்று கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர்கள் தற்சார்புடன் வாழ்க்கை வகுக்க உதவியுள்ளார். யூடியூம் மூலமும் இந்த கலையை இவர் இலவசமாக கற்று தருகிறார்.
     
    கோயமுத்தூர் Saanvi Agricultural Products Private Limited-இன் விs.ஆனந்தி மற்றும் Ms.பரமேஸ்வரி
    பிரிவு: Wonder Women
    சென்னையை சேர்ந்த சான்வி முன்னணி கோகோ சப்ளையர்கள், உற்பத்தியாளராகவும் உள்ளார். ஏற்றுமதியும் செய்கிறார். நடு தரமான நார் பொருட்களையும் உற்பத்தி செய்கிறார்கள். அவற்றை ஏற்றுமதியும் செய்கிறார்கள். செடிகள், பழவகைகள் மற்றும் காய்கறிகள் வளர்க்கும் ஊடகமாக இவர்களின் பொருட்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    மலர்கள் வளர்ப்பு, தோட்டக்கலை மற்றும் விவசாயம் போன்றவற்றில் இவர்களின் கோகோ பிட்டு - கூந்தல்கள் (coco peat& husk chips) பயன்படுத்தப்படுகிறது. இவர்களின் பொருட்கள் அனைத்தும் இயற்கையான முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. சிறந்த சரியான தரத்தில் பொருட்கள் இருக்க வேண்டும் என்பதற்காக மூன்று கட்டங்களாக இவை பரிசோதிக்கப்படுகின்றன. Ms.ஆனந்தி மற்றும் Ms.பரமேஸ்வரி இருவரும் 2017-ஆம் ஆண்டு மிகச்சிறிய அளவில் தங்களது தொழிலை தொடங்கிய இவர்கள் தங்களது மிகப்பெரிய லட்சியத்தினால் வெறும் 3 ஆண்டுகளில் பல மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளனர். தங்களது வாடிக்கையாளர்களின் தேவையை நன்கு புரிந்து கொண்டுள்ளனர். நம்பகமான தரத்தை அளிப்பதற்காக வாடிக்கையாளர்களுடன் நெருக்கமாக பணிபுரிகிறார்கள்.
     
    தங்களது புதுமையான சிந்தைகள் மற்றும் வியாபார தீர்வுகள் மூலம், பலரின் (ஊழியர்கள் மற்றும் நுகர்வோரின்) வாழ்வை மாற்றி, ஒன்றினைந்தசமூகத்தை உருவாக்கியதுடன், பொருளாதாரத்தையும் மேம்படுத்திய இந்த வியாபார உரிமையாளர்கள் மற்றும் இவர்கள் போன்ற மற்றவர்களுக்கும் TALLY மரியாதை செலுத்துகிறது.
    News