ஒலிம்பிக்: வில்வித்தை போட்டியில் இந்திய ஆண்கள் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
Views - 205 Likes - 0 Liked
-
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று வில்வித்தை போட்டியில் ஆண்கள் அணிக்கான எலிமினேஷன் சுற்று நடைபெற்றது. இதில் இந்திய ஆண்கள் அணி கஜகஸ்தான் ஆண்கள் அணியை எதிர்கொண்டது.
இந்திய ஆண்கள் அணியில் அதானு தாஸ், பிரவின் ஜாதவ், தரூன்தீப் ராய் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். போட்டி தொடங்கியது முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. இறுதியில் இந்திய ஆண்கள் அணி 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் கஜகஸ்தான் ஆண்கள் அணியை வீழ்த்தியது.இந்த வெற்றியின் மூலம் ஆண்கள் அணி வில்வித்தை போட்டியில் காலிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. காலிறுதி சுற்றில் இந்திய ஆண்கள் அணி தென்கொரியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி இன்று காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.News