தொண்டர்கள், தலைவர்கள் சால்வை, மாலை கொண்டு வர வேண்டாம்; பா.ஜ.க. தலைவர் கடிதம்
Views - 238 Likes - 0 Liked
-
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அவரது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை, அக்கட்சி வெளியிட்டுள்ளது. அதில், என்னை சந்திக்க வரும் போது பூங்கொத்து, மாலை, மலர் கிரீடம் போன்றவற்றை கொண்டு வருவதை தவிர்க்கும் படி அன்போடு வேண்டுகிறேன்.அதற்கு பதிலாக, நமது கட்சியின் பத்திரிகையான, 'ஒரே நாடு' மாதமிருமுறை இதழுக்கு 3 ஆண்டுகளுக்கான சந்தா செலுத்துவது எனக்கு சால்வை, மாலை, கிரீடம் அணிவிப்பதை விட பெரும் மகிழ்ச்சி தரும்.இதையே நான் பெரிதும் விரும்புகிறேன். நமது கட்சி இதழை ஆதரிப்பதன் மூலம் நமது சித்தாந்தம், நமது சாதனைகளை மக்களுக்கு கொண்டு செல்வோம். உங்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டுகிறேன் என கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் பல்வேறு கட்சிகளுக்கும், தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு பத்திரிகை உள்ளது. அதேபோல், பா.ஜ.க.வின் ஒரே நாடு என்ற பத்திரிகையை பெரிய அளவில் கட்டமைக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார் என கட்சியினர் கூறுகின்றனர்.News