திமுக ஆட்சி இனிப்பு, கசப்பு மற்றும் அதிக காரம் கலந்தது - பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி
Views - 209 Likes - 0 Liked
-
தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் அதிமுகவினர் மீது எந்த தவறும் கிடையாது.அரசியல் காழ்புணர்ச்சி காரணமாகவே கோடநாடு வழக்கை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. முடித்துவைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெயர் சேர்க்க முயற்சி.தமிழகத்தில் திமுக ஆட்சி இனிப்பு, கசப்பு மற்றும் அதிக காரம் கலந்தது; இது தான் திமுக ஆட்சியின் 100 நாட்கள் சாதனை”. கோடநாடு விவகாரம், பாஜகவினர் மீது வழக்கு போடுவது போன்ற செயல்களை திமுக அரசு கைவிட்டுவிட்டு மக்கள் பணிகளை செய்யவேண்டும்.News