பள்ளிகளில் கொரோனா அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை
Views - 252 Likes - 0 Liked
-
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த பள்ளிகள், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 9-12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் திறக்க தமிழக அரசு முடிவெடுத்தது. பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் முதல், பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படுவது அதிகரித்து வருகிறது.இந்நிலையில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா பரவக் காரணம், கொரோனா பரவாமல் தடுக்க செய்ய வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலி காட்சியின் வாயிலாக இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.News