இலங்கை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சலுகை
Views - 233 Likes - 0 Liked
-
சுற்றுலா பயணிகளின் வருகைக்காக, இலங்கை தனது எல்லைகளை உலகுக்கு திறந்துவிட்டுள்ளது. புதிய வழிகாட்டுதலின்படி இந்தியா உள்பட அனைத்து நாடுகளில் இருந்தும் முழுமையாக தடுப்பூசி போட்ட சுற்றுலா பயணிகள் வரலாம் என்று இலங்கை அறிவித்துள்ளது.
முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள், கொரோனா (ஆர்.டி.பி.சி.ஆர்.) பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என சான்று வைத்திருப்பவர்கள், இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு வந்தவுடன் பரிசோதனை செய்யவேண்டியது இல்லை. மேலும் பயணிகள் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டியதும் இல்லை. பயணத்துக்கு, குறைந்தது 14 நாட்களுக்கு முன்பு ஒருவர் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்கவேண்டும்.இந்த அறிவிப்பு சலுகை, சுற்றுலா பயணிகளுக்கான பயண விதிமுறைகளை தளர்த்திய பிறகு, இந்தியாவில் உள்ள சுற்றுலா பயணிகளுக்கு இலங்கையில் உள்ள பல இடங்களை ஆராய உதவும். இந்திய சுற்றுலா பயணிகளுக்காக ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' நிறுவனம் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' என்ற சிறப்பு டிக்கெட் சலுகையையும் அறிமுகம் செய்துள்ளது.News