கனமழை: விருதுநகரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை
Views - 213 Likes - 0 Liked
-
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில், வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.இதனை முன்னிட்டு, தமிழகத்தில் நேற்று 7 மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தொடர்மழையால் தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம், திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.இதேபோன்று, விருதுநகரில் கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதனால், தமிழகத்தில் தொடர்மழையால் 9 மாவட்டங்களை சேர்ந்த பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.News