சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Views - 245 Likes - 0 Liked
-
சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை பாதிப்பால் பொதுமக்களுக்கு நோய் பரவாமல் தடுக்க இன்று சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மழை கால இலவச சிறப்பு மருத்துவ முகாமை சென்னை ஆழ்வார்பேட்டையில் மழைக்கால முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.இந்த சிறப்பு மருத்துவ முகாம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் நடைபெறுகிறது. பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், காய்ச்சல் உள்ளிட்ட நோய் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மணடலம் காரணமாக சென்னையில் கொட்டி தீர்த்த கனமழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறி போனது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. சாலைகள், சுரங்கப்பாதைகள், தெருமுனைகள் என திரும்பிய திசையெங்கும் மழைநீர் ஆக்கிரமித்து, குடியிருப்புகளை தனி தீவாகவே மாற்றியிருந்தது.திரும்பிய பக்கம் எல்லாம் தண்ணீராக காட்சி அளித்தபோதும், இன்னொரு புறம் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி, குடிநீர் வாரியம், தீயணைப்பு துறை என அனைத்து துறை அதிகாரிகளும் முழுவீச்சில் பணியாற்றினர். மின் மோட்டார் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணி மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.News